மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் பலி
x

கபிஸ்தலம் அருகே மனைவியை பார்க்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்று(சனிக்கிழமை) வெளிநாடு செல்ல இருந்தவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே மனைவியை பார்க்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்று(சனிக்கிழமை) வெளிநாடு செல்ல இருந்தவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.

மனைவியை பார்க்க சென்றார்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள பாபநாசம் புதுத்தெருவில் வசித்து வந்தவர் சிவக்குமார்(வயது 38). இவரது மனைவி ஜாணிக பிரியா(27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சிவக்குமார், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று திருவையாறு தியாகராஜர் காலனியில் வசிக்கும் தனது மனைவி ஜாணிக பிரியாவை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கபிஸ்தலத்தில் இருந்து திருவையாறு நோக்கி சென்றார். ஈச்சங்குடி அருகே சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் சிவக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

தவறி விழுந்து சாவு

இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்ததில் சிவக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான சிவக்குமார் இன்று(சனிக்கிழமை) மீண்டும் வெளிநாடு செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story