தன்னை செருப்பால் அடிக்க வந்ததாக திமுக வட்ட செயலாளர் மீது விசிக கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு


தன்னை செருப்பால் அடிக்க வந்ததாக திமுக வட்ட செயலாளர் மீது விசிக கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு
x

தன்னையும் தன்னுடைய ஆட்களையும் செருப்பால் அடிக்க வந்ததாக திமுக வட்ட செயலாளர் மீது விசிக கவுன்சிலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை,

அசோக் நகர் 3-வது அவென்யூவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னையும் தன்னுடைய ஆட்களையும் செருப்பால் அடிக்க வந்ததாக திமுக வட்ட செயலாளர் செல்வகுமார் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் சாந்தி என்ற யாழினி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அசோக் நகர் 135-வது வார்டு கவுன்சிலர் சாந்தி, தனக்கு சீட்டு வழங்காததால் கூட்டணி கட்சியில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுத்த தன்னை செல்வகுமார் தொடர்ந்து இழிவுபடுத்துவதாகவும் வேதனை தெரிவித்தார்.

திமுக வட்டசெயலாளர் செல்வகுமார், முன்னாள் வட்ட செயலாளர் மணி ஆகியோர் அவதூறாக பேசி தாக்க முற்பட்டதாகவும் அசோக் நகர் போலீசில் புகாரளித்துள்ளார். முன்னதாக இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story