சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி


சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி
x

பத்தமடையில் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலியானாா்.

திருநெல்வேலி

அம்பை:

பத்தமடை மங்களா கீழத் தெருவைச் சேர்ந்தவர் மலுக்காமலி (வயது 67). மும்பையில் ெரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று மாலை வீட்டின் ஒரு பகுதியிலுள்ள சுற்றுச்சுவரை கடப்பாரையால் இடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 8 அடி உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுக்குள் மலுக்காமலி சிக்கிக் கொண்டார். இதில், அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story