மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு..!
மேட்டூர் அணையில் தற்போது 19.96 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்ததாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.16 அடியில் இருந்து 53.32 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 2,227 கன அடியில் இருந்து 1,845 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 19.96 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story