தொட்டி நிறைந்து வீணாகும் குடிநீர்
தொட்டி நிறைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர்
குன்னத்தூர்
குன்னத்தூர் அருகே சுண்டக்காம்பாளையம் ஊராட்சி வாமலை கவுண்டன் பாளையம் பாலக்குளம் பிரிவு அருகே பிளாஸ்டிக் தொட்டி வைத்து தண்ணீர் நிரப்பி வருகிறார்கள். அந்த தொட்டிக்கு காலை மற்றும் மாலையில் தண்ணீர் நிரப்ப தனியாக ஊழியரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் மணி 1 மணி அளவில் ெதாட்டி நிறைந்து குடிநீர் பல மணி நேரம் வீணாக சென்றது. எனவே சம்பந்தப்பட்ட ஊழியர் குடிநீரை நிரப்ப திறந்து விட்டதும் நிறைந்தது உடனடியாக அடைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
---
Related Tags :
Next Story