தேவகோட்டை அருகே தீக்குளித்த வியாபாரியை காப்பாற்ற முயன்ற மனைவியும் சாவு
தேவகோட்டை அருகே தீக்குளித்த வியாபாரியை காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழந்தார்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). மர வியாபாரி. அவரது மனைவி ராஜேஸ்வரி (52). சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த கண்ணன் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். கணவரை காப்பாற்ற சென்ற அவரது மனைவி ராஜேஸ்வரி தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஆனால் இந்த விபத்தில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அவரது மனைவி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.