டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர்களை துரத்திய காட்டுயானைகள்


டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர்களை துரத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர்களை துரத்திய காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர்களை துரத்திய காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுயானைகள் முகாம்

வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை எஸ்டேட் பாறைமேடு பகுதியில் உள்ள சிறு புதர் செடிகளை கொண்ட சோலைக்குள் 2 யானைகள் நேற்று காலை முதல் முகாமிட்டு நின்றன. அந்த இடத்துக்கு அருகில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதும், மது பாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்கள் வந்தனர். ஆனால் அருகில் காட்டு யானைகள் முகாமிட்டு நின்றதால், டாஸ்மாக் கடைக்கு செல்வதற்கு அச்சமடைந்தனர்.

பரபரப்பு

இதையடுத்து சிறிது நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து சற்று தள்ளி சென்று சோலைக்குள் பதுங்கி நின்றது. தொடர்ந்து ஒரு சிலர் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பின்னர் மதியம் 2 மணியளவில் மீண்டும் டாஸ்மாக் கடை அருகே 2 யானைகளும் வந்தது. தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு வந்தவர்களை விரட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டாஸ்மாக் கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வால்பாறை வனத்துறையினர் விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னரே டாஸ்மாக் கடைக்கு மதுப்பிரியர்கள் அச்சமின்றி வந்து சென்றனர்.


Next Story