தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்


தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானைகள் தென்னை, நெற்பயிர்களை சேதப்படுத்தின.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானைகள் தென்னை, நெற்பயிர்களை சேதப்படுத்தின.

தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்

விக்கிரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியர்புரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல், தென்னை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவை சேர்ந்த விவசாயி வைத்திலிங்கத்துக்கு சொந்தமான தோட்டத்துக்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானைகள், அங்கு பயிரிட்டிருந்த நெற்பயிர்களை மிதித்து தின்று சேதப்படுத்தின. மேலும் தென்னை மரத்ைத சரித்த காட்டு யானைகள், அங்கிருந்த பிளாஸ்டிக் குழாய்களையும் சேதப்படுத்தின.

இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த கருவேல், முருகன், மாணிக்கம், இசக்கிமுத்து, ஏசுராஜன், பழனி, தவசுபாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தின.

சோலார் மின்வேலி

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாதவாறு மலையடிவார பகுதியில் சோலார் மின்வேலியை முழுமையாக அமைக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு மானியம் வழங்கினால் நாங்களே சோலார் மின்வேலி அமைத்து பயிர்களை பாதுகாப்போம்'' என்றனர்.


Next Story