போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்ணின் குழந்தையை தொட்டில் ஆட்டி தூங்க வைத்த பெண் போலீசார்


போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்ணின் குழந்தையை தொட்டில் ஆட்டி தூங்க வைத்த பெண் போலீசார்
x

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல்தகுதி தேர்வில் பங்கேற்க வந்த பெண்ணின் குழந்தையை பெண் போலீசார் தொட்டில் ஆட்டி தூங்க வைத்தனர்.

திருச்சி:

திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல்தகுதி தேர்வில் பங்கேற்க வந்த பெண்களில் ஒருசிலர் தங்களது கைக்குழந்தைகளையும் தூக்கி வந்து இருந்தனர். குழந்தையை மைதானத்தில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி படுக்க வைத்துவிட்டு தேர்வில் பங்கேற்றனர்.

அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை அழுதபோது அங்கு பாதுகாப்பு பணிக்கு இருந்த பெண் போலீசார், தொட்டிலை ஆட்டி குழந்தையை தூங்க வைத்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story