பத்திரப்பதிவை தாமதப்படுத்தியதால் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடுவழங்க வேண்டும்


பத்திரப்பதிவை தாமதப்படுத்தியதால் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடுவழங்க வேண்டும்
x

பத்திரப்பதிவை தாமதப்படுத்தியதால் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 51). பெரம்பலூர் தெற்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் இருந்து 232 சதுரஅடி நிலத்தில் முதல்தளத்துடன் கட்டப்பட்டிருந்த கடையை செல்வராஜ் தனது மனைவி தனலட்சுமி பெயருக்கு கிரையம் பெற்று அதனை பதிவு செய்வதற்காக பெரம்பலூர் தாலூகா அலுவலக வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். உரிய பத்திர செலவு, பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி பத்திரம் பதிவு செய்ய விண்ணப்பித்தனர். ஆனால் அப்போது பணியில் இருந்த சார்பதிவாளர் அந்த ஆவணத்தை பதிவு செய்வதற்கான உரிய நடைமுறைகள் சரியாக இருந்தும், உடனே பதிவு செய்து கிரைய பத்திரத்தை வழங்காமல், நிலுவையில் உள்ள ஆவணமாக வைத்திருந்தார். ஆவணத்தை பதிவு செய்ய ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று செல்வராஜ் சார்பதிவாளரிடம் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மணிவண்ணன் என்பவர் தடை மனு கொடுத்துள்ளார். ஆகவே பத்திரவு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்ற பதிலை தெரிவித்துள்ளார். மேலும் தனலட்சுமியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே தராமல் அலைக்கழித்துள்ளார். இதில் மனஉளைச்சல் அடைந்த தனலட்சுமி, தனது வக்கீல் சீனிவாசமூர்த்தி மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் தனலட்சுமியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணத்தை தராமல் அலைக்கழிப்பு செய்து, அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியமைக்காக சார்பதிவாளர் அலுவலக சேவை குறைபாடு காரணமாக ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் பெரம்பலூர் சார்பதிவாளர் மற்றும் அரியலூர் மாவட்ட பதிவாளர் ஆகியோர் வழங்கவேண்டும் என்று நீதிபதி ஜவஹர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.


Next Story