பெண் போலீஸ் ஏட்டு அணிந்திருந்த 3½ பவுன் செயின்பறிப்பு


பெண் போலீஸ் ஏட்டு அணிந்திருந்த 3½ பவுன் செயின்பறிப்பு
x

பெண் போலீஸ் ஏட்டு கழுத்தில் இருந்து 3½ பவுன் நகையை பெறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

பெண் போலீஸ் ஏட்டு

திருப்பத்தூர் தென்றல் நகரில் வசிப்பவர் அன்பழகன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி அறிவுமதி (வயது 39). இவர் தர்மபுரியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல தருமபுரிக்கு பணிக்கு சென்று விட்டு இரவு 9.30 மணி அளவில் திருப்பத்தூருக்கு பஸ்சில் வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவரது கணவர் மோட்டார் சைக்கிளில் அவரை உட்கார வைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தென்றல் நகர் 3-வது தெருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

செயின் பறிப்பு

அவர்கள் போலீஸ் ஏட்டு அறிவுமதி கழுத்தில் இருந்த 3½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து போலீஸ் ஏட்டு அறிவுமதி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் ஏட்டு கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story