திருவள்ளூர் அருகே ரெயில் மோதி இறந்த பெண் ராணுவ வீரரின் மனைவி


திருவள்ளூர் அருகே ரெயில் மோதி இறந்த பெண் ராணுவ வீரரின் மனைவி
x

திருவள்ளூர் அருகே 25-ந் தேதி ரெயில் மோதி இறந்த பெண் ராணுவ வீரரின் மனைவி என அடையாளம் காணப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 25-ந் தேதி 30 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கா திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில் இறந்த பெண் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவரின் மனைவி சங்கீதா (வயது 25) என தெரிய வந்தது.

அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு 5 நாட்களுக்கு முன்னர் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சற்று மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்ட அவர் கடந்த 25-ந் தேதியன்று ஆஸ்பத்திரியில் இருந்து தானாக வெளியேறி ரெயில் மூலம் திருநின்றவூர் வந்துள்ளார். பின்னர் அவர் திருநின்றவூர் வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. இது சம்பந்தமாக திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story