தலையில் கல்லை போட்டு கணவனை கொன்ற பெண்


தலையில் கல்லை போட்டு கணவனை கொன்ற பெண்
x

கள்ளக்காதலை கைவிட மறுத்து குடிபோதையில் தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண் கணவனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.

அரக்கோணம்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் பகுதியை சேர்ந்த நடேசன் மகன் சீராளன் (வயது 38). அதே பகுதியில் இவர் 'சவுண்டு சர்வீஸ்' நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சீராளன் மதுவுக்கு அடிமையாகி குடிபோதையில் வீட்டுக்கு வந்ததால் அவருக்கும் மனைவி ஷோபனாவுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் சீராளன் மது போதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கொலை

இதில் ஆத்திரமடைந்த ஷோபனா, அருகில் இருந்த கல்லை எடுத்து சீராளன் தலை மீது போட்டதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர், கணவனை கொலை செய்துவிட்டதாக கூறி நேற்று காலை போலீசில் சரணடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஷோபனா தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து பலமுறை வேண்டாம் என்று தெரிவித்த போதும் அதை பொருட்படுத்தாமல் தினமும் குடித்துவிட்டு வந்து பலமுறை தன்னையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தார். அதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் பின்னர் ஷோபனாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story