மது விற்ற பெண் கைது


மது விற்ற பெண் கைது
x

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள செம்பியநத்தம் ஊராட்சி மோளப்பட்டி பகுதியில் பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னதாய் (வயது 65) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுவை பதுக்கி வைத்து விற்று கொண்டிருந்தார். இதையடுத்து சின்னதாயை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story