திருப்பத்தூருக்குள் நுழைந்த 2 யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணி 3-வது நாளாக தீவிரம்..!


திருப்பத்தூருக்குள் நுழைந்த 2 யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணி 3-வது நாளாக தீவிரம்..!
x

திருப்பத்தூருக்குள் நுழைந்த 2 யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணி 3-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம், தண்ணீர் பந்தல், கரடிகுட்டை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் கடந்த சனிக்கிழமை முகாமிட்டிருந்தன. வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானைகள் முகாமிட்டுள்ள இடத்தை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பத்தூருக்குள் நுழைந்த 2 யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணி 3-வது நாளாக இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யானைகளை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குரல் செய்து பதிவு அனுப்பி உள்ளார்.

ஏலகிரி மலையில் அடிவாரத்தில் இருந்து ஏலகிரி கிராமம், கருப்பனூர், வெங்காயப்பள்ளி, ஜடையனூர், ஜலகாம்பாறை, பெருமாபட்டு, மிட்டூர் வழியாக ஜமுனாமரத்தூர் காட்டுப் பகுதிக்கு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story