மாதா மலைக்கெபிக்கு 'லிப்ட்' அமைக்கும் பணி தொடக்கம்


மாதா மலைக்கெபிக்கு லிப்ட் அமைக்கும் பணி தொடக்கம்
x

தெற்கு கள்ளிகுளம் மாதா மலைக்கெபிக்கு ‘லிப்ட்’ அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்து தம்பாதம் பதித்த மலைக்கெபி அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்ல பாறையை செதுக்கி படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படிகள் வழியாக ஏறிச்சென்று மாதா காட்சி கொடுத்த கெபியையும், பாதம் பதித்த இடத்தையும் தரிசிக்க சிறுவர்கள் மற்றும் முதியவர்களால் இயலவில்லை. எனவே மாதா காட்சி கொடுத்த மலைக்கு செல்ல 'லிப்ட்' அமைக்கவேண்டும் என முதியவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தெற்குகள்ளிகுளத்தைச் சேர்ந்த சென்னை தொழிலதிபர் சாமிநாதன், மலைக்கெபிக்கு லிப்ட் அமைக்கும் பணியை தன்சொந்த செலவில் செய்து கொடுக்க முன்வந்தார். இதையடுத்து மலைக்கெபிக்கு மின்தூக்கி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிசய பனிமாதா கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமை தாங்கினார். பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஜெபம் செய்து அர்ச்சித்தார். தொழிலதிபர் சாமிநாதன் அடிக்கல் நாட்டி லிப்ட் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மும்பை களிகை சங்க தலைவர் மைக்கிள் பிரகாசம், செயலாளர் அந்தோணி சீலன், முன்னாள் செயலாளர் லாசர், சுரேஷ், கள்ளிகுளம் புனித பேரரசு, கவுதம், ஆன்றோ, சென்னை களிகை சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் தங்கதுரை, பொருளாளர் ஜூலியஸ், ஜார்ஜ் செல்வன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, பெஸ்கி, ரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story