மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு வாசல்கால் அமைக்கும் பணி


மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு வாசல்கால் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கொல்லைமேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு வாசல்கால் அமைக்கும் பணி சிறப்பு பூஜையுடன் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜகோபுரத்துக்கு கல்தூண்களால் பிரமாண்டமான வாசல்கால் அமைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி கல்தூண்களால் ஆன வாசல்கால்களின் மீது மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள், சந்தனம் பூசி குங்குமம் வைக்கப்பட்டது. பின்னர் மாலை அணிவித்து பூஜை நடைபெற்றதை தொடர்ந்து வாசல்காலுக்கு கல்தூண்கள் வாயிலில் நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story