வ.உ.சிதம்பரனார் சிலை நிறுவும் பணி மும்முரம்


வ.உ.சிதம்பரனார் சிலை நிறுவும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவை வ.உ.சி. மைதானத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை நிறுவும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

கோவை வ.உ.சி. மைதானத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை நிறுவும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வ.உ.சி.க்கு சிலை

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி.க்கு முக்கிய பங்கு உண்டு. அவரை கைது செய்த ஆங்கிலேயர்கள், கோவை சிறையில் அடைத்து செக்கு இழுக்க வைத்தனர். அவர் இழுத்த செக்கு கோவை மத்திய சிறையில் தற்போதும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

வ.உ.சிதம்பரனார் நாட்டுக்கு ஆற்றிய பங்கை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கோவை வ.உ.சி. பூங்காவில் வ.உ.சி. சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

பீடத்தில் நிறுவும் பணி

அதன் முடிவில் வ.உ.சி. சிலை அமைக்கும் இடம் மாற்றப்பட்டு வ.உ.சி. மைதானத்தில் 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.

அங்கு சிலை அமைப்பதற்காக பீடம் அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த பீடத்தில் நிறுவுவதற்காக 600 கிலோ எடையில் வ.உ.சிதம் பரனாரின் முழுஉருவ வெண்கல சிலை சென்னையில் இருந்து தயாரிக்கப்பட்டது.

பின்னர் அந்த வெண்கல சிலை கோவை கொண்டு வரப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் வ.உ.சி. மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் நிறுவப்பட்டது.

ரூ.40 லட்சம்

பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் வ.உ.சிதம்பரனாரின் முழுஉருவ வெண்கலசிலையை நிறுவும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை வ.உ.சி. மைதானத்தில் பீடம் அமைத்து வ.உ.சிதம்பரனா ருக்கு ரூ.40 லட்சத்தில் 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலையை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

அதில் வ.உ.சிதம் பரனார் குறித்த வரலாற்று தகவல்கள் இடம்பெறும். இந்த பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் சிலை திறக்கப்படும் என்றனர்.


Next Story