மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரம்


மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

கோவை

பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பும், மண் பானையில் செய்யப்படும் பொங்கலும்தான். நாகரீகம் வளர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சிலர் வீடுகளில் மண் பானைகளுக்கு பதிலாக எவர் சில்வர் பாத்திரத்தில் பொங்கல் வைக்கின்றனர்.

இருப்பினும் பலர் பாரம்பரியத்தை காக்கும் வகையில் இன்னும் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் சாதாரண பானைகள் முதல் வண்ண பானைகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் இந்த பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரூ.3 ஆயிரம் வரை...

இதுகுறித்து மண் பானை விற்பனை செய்யும் அசோக்ராஜா கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் விற்பனை தற்போது தொடங்கி உள்ளது. இதில் ரூ.100 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான பானைகள் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பொங்கலிட வர்ணம் தீட்டப்படாத சாதாரண பானைகளை பயன்படுத்த வேண்டும். வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் ஷோரூம்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்படுகிறது.

மண் எடுக்க தடை

சிலர் வீடுகளில் எவர் சில்வர் பாத்திரத்தில் பொங்கல் வைக்கின்றனர். ஆனால் நமது பாரம்பரியம் மண் பானையில் பொங்கலிடுவது தான். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு மண் பானையில் பொங்கிலிட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்து கூற வேண்டும். மேலும் மண் பானையில் பொங்கல் வைப்பதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது பானை செய்ய தேவையான மண் எடுக்க பல்வேறு தடைகள் உள்ளன. இதன் காரணமாக பானை விலை உயர்ந்து உள்ளது. கோவையில் மட்டுமின்றி நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும் பானைகளும் கோவைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story