மரக்கன்றுகள் நடும் பணி


மரக்கன்றுகள் நடும் பணி
x

வேய்ந்தான்குளம் சுற்றுச்சூழல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை வேய்ந்தான்குளம் சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது தண்ணீர் தேங்கி குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பறவைகள் குளத்திற்கு வந்து உள்ளன. ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தட்டான், நீர் காக்கைகள், கொக்குகள், நாரைகள் மற்றும் மீன்கொத்திகள் இந்த குளத்தில் அதிக அளவு தற்போது காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சுற்றுச்சூழல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து 330 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுயம்பு தங்கராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நக்கீரன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story