பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கும் பணி தொடக்கம்


பள்ளி  மாணவ- மாணவிகளுக்கு  கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

கட்டணமில்லா பஸ் பாஸ்

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொறையாறு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா பிரிமியம் பஸ் பாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொறையாறு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஆசீர்வாதம் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சிசிலி வரவேற்றார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகை கோட்ட மேலாளர் ராமமூர்த்தி இந்த பள்ளியில் விண்ணப்பித்த 265, மாணவிகளுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா பிரிமியம் பஸ் பாஸ் அடையாள அட்டை வழங்கினார். தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள தரங்கம்பாடி, பொறையாறு ,திருக்கடையூர், திருக்களாச்சேரி, தில்லையாடி, சின்னங்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் ஆயிரத்து 305 பேர் பஸ் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் அனைவருக்கும் விரைவில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்றார். இதில் பள்ளி ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சீர்காழி

இதேபோல் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணத்திற்கான ஸ்மார்ட் கார்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சீர்காழி அரசு கிளை போக்குவரத்து கழக மேலாளர் வடிவேல் கலந்து கொண்டு 416 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச பஸ் பயணத்திற்கான ஸ்மார்ட் கார்டினை வழங்கி பேசினார். இதேபோல் சீர்காழி பகுதியை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பயணத்திற்கான ஸ்மார்ட் கார்டினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், போக்குவரத்து கழக அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story