திருக்கோவிலூரில்பா.ஜ.க. பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்


திருக்கோவிலூரில்பா.ஜ.க. பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் பா.ஜ.க. பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் எம்.அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, திருக்கோவிலூர் வடக்கு ஒன்றியத்தில் 12 பேர்கள் கொண்ட வலிமையான பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்த பணிகளை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு செய்யவும் உள்ளார். எனவே நிர்வாகிகள் முறையாக செயல்பட்டு கட்சி பணியை தீவிரமாக செய்து முடிக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை ராஜ்குமார் நிர்வாகிளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராதிகாகாந்தச்செல்வன், ஒன்றிய பார்வையாளர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன், பொதுச்செயலாளர் மேமாளூர் சிவராஜ், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கொளஞ்சியப்பன், துணைத் தலைவர்கள் சக்திவேல், முருகன், செயலாளர்கள் ஆறுமுகம், வல்லரசு, அறிவழகன், சண்முகம், சுகன்யா, மணிகண்டன், சிவக்குமார், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேங்கூர் பாபு, நெடுமுடையான் மணிகண்டன் உள்ளிட்ட சிலர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story