மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு
x

கோவில்பட்டி அருகே, மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே, மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மனோஜ்குமார் (வயது 25). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதுரையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

கோவில்பட்டி நாற்கர சாலையில் கோபாலபுரம் விலக்கு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story