மயங்கி விழுந்த தொழிலாளி சாவு


மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மயங்கி விழுந்த தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள பொ.மெய்யூர் கிராமம் அரசமரத்து தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 47). இவர் அதே ஊரை சேர்ந்த தனது உறவினர்களுடன் சோழபாண்டியபுரம் கிராமம் வரை சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் கிருஷ்ணமூர்த்திக்கும் உறவினர் சிலம்பரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதைத்தொடர்ந்து கைகலப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே அவர்களை மற்ற உறவினர்கள் சமாதானம் செய்ததை அடுத்து ஊருக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினா்கள் சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டதாக வதந்தி காட்டுத்தீபோல் பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க பொ.மெய்யூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story