தொழிலாளி மர்மச்சாவு


தொழிலாளி மர்மச்சாவு
x
தினத்தந்தி 26 Oct 2023 1:15 AM IST (Updated: 26 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் பஸ்நிறுத்தம் அருகில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 27). பூமாலை கட்டும் தொழிலாளி. நேற்று மாலை இவர், ஆத்துமேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் பூட்டி கிடந்த கடையின் முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள், விக்னேஸ்வரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த ேவடசந்தூர் போலீசாரும் அங்கு விரைந்தனர். மேலும் விக்னேஸ்வரன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story