தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் ராமசாமி(வயது 38). விவசாய தொழிலாளியான இவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை தன் மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று அவரது கையில் இருந்த மண்எண்ணெயை பாட்டிலை பறித்து அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புறம்போக்கு இடத்தில் ராமசாமிக்கு பட்டா கொடுக்கப்பட்ட இடத்தை கோட்டாட்சியர் விசாரணை செய்து வேறு நபருக்கு கொடுக்க போவதாக தகவல் வந்ததாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்களிக்க முயன்றதாகவும் போலீசாரிடம் கூறினார். பின்னர் அவருக்கு போலீசார் உரிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலக முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story