யாங்கீஸ் அணி வெற்றி


யாங்கீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 17 Jun 2023 8:15 PM GMT (Updated: 17 Jun 2023 8:15 PM GMT)

மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் யாங்கீஸ் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணியும், யாங்கீஸ் அணியும் மோதியது. தலா 35 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணி வீரர் லோகேஸ்வரன் 28 ரன்கள் எடுத்தார். யாங்கீஸ் அணியின் பந்து வீச்சாளர் சந்த்ரூ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 210 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யாங்கீஸ் அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி பிடித்தது. இந்த அணி வீரர் அருண் 36 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன் மூலம் யாங்கீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story