விருதுநகர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை


விருதுநகர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள சங்குரெட்டியபட்டியை சேர்ந்தவர் மருதாயி (வயது 50). இவரது கணவர் முருகன் மற்றும் மகள் கவிதா ஆகியோர் கடந்த 8 மாதங்களுக்கு முன் உடல்நல குறைவால் இறந்து விட்டனர். இதனை தொடர்ந்து இவரது மகன் கலைச்செல்வன் (21) மன வேதனையில் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று மருதாயி வெளியே சென்று இருந்த போது கலைச்செல்வன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருதாயி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story