கொத்தனாரை தாக்கிய வாலிபர் கைது
வாணாபுரத்தில் கொத்தனாரை தாக்கிய வாலிபர் கைது
ரிஷிவந்தியம்
வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் வீரப்பன். கொத்தனாரான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மரூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பிரதாப் மோட்டார் சைக்கிளில் திடீரென குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய வீரப்பன் அவரிடம் ஏன் திடீரென குறுக்கே வந்தாய் என்று தட்டி கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்,
பின்னர் மறுநாள் பிரதாப் இவரது சகோதரர் செல்லமுத்து(வயது 19), சின்னத்தம்பி மகன் உத்திராபதி உள்ளிட்ட 4 பேர் வீரப்பன் வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிந்து செல்லமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.