வீடு புகுந்து மாணவியை கடத்திய வாலிபர் கைது


வீடு புகுந்து மாணவியை கடத்திய வாலிபர் கைது
x

ஸ்ரீமுஷ்ணம் அருகே வீடு புகுந்து மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

மாணவி

ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஆயிப்பேட்டை நயாபைசா தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (வயது 22), வீடு புகுந்து மாணவியை கடத்திச் சென்றார்.

வாலிபர் கைது

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அஜயை கைது செய்தனர். மேலும் மாணவியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story