சொக்கப்பனை தாண்டிய வாலிபர் தீயில் கருகி சாவு


சொக்கப்பனை தாண்டிய வாலிபர் தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 14 Dec 2022 1:00 AM IST (Updated: 14 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி அருகே சொக்கப்பனை தாண்டிய வாலிபர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:-

பரமத்தி அருகே சொக்கப்பனை தாண்டிய வாலிபர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சொக்கப்பனை

பரமத்தி அருகே வெள்ளாளபாளையம், பூலாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் எலையான். இவருடைய மகன் வல்லரசு (வயது 18). கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய வல்லரசு, தன்னுடைய தந்தையுடன் விவசாய வேலை செய்து வந்தார்.

கடந்த 6- ந் தேதி கார்த்திகை தீபத்தன்று அப்பகுதியில் உள்ள கொங்காளம்மன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சொக்கப்பனை கொளுத்திய பின்னர் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், அந்த சொக்கப்பனை தீயைதாண்டும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

தீயில் கருகி சாவு

அப்போது வல்லரசும் அந்த சொக்கப்பனை தீயை தாண்டினார். திடீரென நிலைதடுமாறி தவறி தீயில் விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வல்லரசு படுகாயம் அடைந்து அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் வல்லரசுவை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வல்லரசு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story