குரூப்-2 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த வாலிபர், கலெக்டர் ஆய்வில் சிக்கினார்


குரூப்-2 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த வாலிபர், கலெக்டர் ஆய்வில் சிக்கினார்
x

பரமக்குடியில் குரூப்-2 தேர்வு எழுதும் அறையில் செல்போன் ைவத்திருந்த வாலிபர், கலெக்டர் ஆய்வின் போது சிக்கினார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் குரூப்-2 தேர்வு எழுதும் அறையில் செல்போன் ைவத்திருந்த வாலிபர், கலெக்டர் ஆய்வின் போது சிக்கினார்.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 பணிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காலை 9:30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் நுழைந்த அனைவரையும் நுழைவு வாயிலில் போலீசார் சோதனை செய்து தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.

அந்த பள்ளியில் 20 பேருக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 30 அறைகளில் 600 பேர் தேர்வு எழுதினர். 64 பேர் தேர்வு எழுத வரவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

கலெக்டர் கண்டுபிடித்தார்

தேர்வு நடைபெறும் மையங்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டார். பரமக்குடியில் உள்ள அந்த தேர்வு மையத்தை பார்வையிட வந்த போது அவருடைய செல்போன் ப்ளூடூத்தை ஆன் செய்து வைத்துக் கொண்டு தேர்வு மையத்திற்குள் நுழைந்தார். அப்போது அவருடைய ப்ளூடூத்தில், தேர்வு அறையில் வேறு செல்போன் இருப்பதற்கான சிக்னல் காண்பித்தது. உடனே அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அழைத்து இங்கு, யாரோ செல்போன் வைத்திருக்கிறார் என்றும், உடனே சோதனை செய்யுமாறும் போலீசாரை அறிவுறுத்தினார். உடனே போலீசார் ஒவ்வொரு அறைக்கும் சென்று தேர்வு எழுதியவர்களை சோதனை செய்தனர்.

வாலிபர் சிக்கினார்

அப்போது ஒரு அறையில், நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (வயது 33) என்பவர் செல்போன் வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை, மாவட்ட கலெக்டரிடம் அழைத்து வந்தனர். விசாரணையில் சங்கர் செல்போனை பயன்படுத்தி தேர்வு எழுதவில்லை என்றும், தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்தார் என்றும் தெரியவந்ததால், அந்த வாலிபர் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சங்கர் தேர்வு மையத்திற்குள் வந்த போது பேண்ட் உள் பாக்கெட்டில் செல்போனை மறைத்து வைத்துக் கொண்டு சோதனை செய்த போலீசாருக்கு டிமிக்கி ெகாடுத்துவிட்டு, தேர்வு அறைக்குள் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இச்சம்பவம் அந்த தேர்வு மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story