தீக்குளித்த வாலிபர் சாவு


தீக்குளித்த வாலிபர் சாவு
x

ஏர்வாடியில் தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி வணிகர் மேல முடுக்கு தெருவைச் சேர்ந்தவர் அகமது பாட்ஷா மகன் முகம்மது இம்ரான் (வயது 29). இவர் குவைத் நாட்டில் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 14-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 24-ந்தேதி முகம்மது இம்ரான் தனது நண்பர் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், இதனைப் பார்த்த முகம்மது இம்ரானின் தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முகம்மது இம்ரான் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து வந்து, தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி முகம்மது இம்ரான் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story