பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது


பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
x

நெல்லை அருகே பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கீழதென்கலம் தெற்கு மலை காலனியை சேர்ந்த பாப்பா மனைவி சேர்மக்கனி (வயது 50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் சுரேஷ்குமார் (30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சுரேஷ்குமார் முன்விரோதம் காரணமாக சேர்மக்கனி வீட்டுக்கு சென்று தகராறு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story