பெண்ணை கட்டிப்போட்டு பணம் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்


பெண்ணை கட்டிப்போட்டு பணம் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கட்டிப்போட்டு பணம் திருடிய வாலிபரை மடக்கி மக்கள் பிடித்தனர்.

சிவகங்கை

மதகுபட்டியை அடுத்துள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 52). சம்பவத்தன்று பகல் 11.30 மணி அளவில் ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி ராஜேஸ்வரியை மிரட்டினார். மேலும் அவரை கயிற்றில் கட்டி போட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தார். அப்போது ராஜேஸ்வரி அது கவரிங் செயின் எனக்கூறவே ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரை கையால் தாக்கினார்.

மேலும் வீட்டில் இருந்த ரூ.ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து ராஜேஸ்வரி திருடன் திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை மதகுபட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் பகுதியை சேர்ந்த சூர்யா (25) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story