இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி


இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபருக்கு  பொதுமக்கள் தர்ம அடி
x

திண்டிவனத்தில் பரபரப்பு இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமன் மனைவி திவ்யா(வயது 25). இவர் தினமும் தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க சென்று வரும்போது மர்ம நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதியம் திவ்யா அவரது குழந்தைக்கு உணவு கொடுப்பதற்காக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தீர்த்தக்குளம் டீக்கடை எதிரே வந்தபோது திடீரென அந்த மர்ம நபர் திவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி மோட்டார் சைக்கிளில் உட்கார் என அவரை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த மர்மநபரை பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனுசாமி மகன் குமரேசன்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் தீர்த்தக்குளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் ராமு உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story