பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த வாலிபர்கள்


பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த வாலிபர்கள்
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலியை வாலிபர்கள் பறித்தனா். அது கவரிங் என்று தெரிந்ததும் ஆபாசமாக திட்டிவிட்டு ஓடிவிட்டனா்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள புதுஒட்டநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பத்மா(வயது 40). இவர் நேற்று இரவு வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், திடீரென பத்மாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்தனர். அப்போதுதான், அது தங்கம் இல்லை, கவரிங் என்று தெரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும், தாலி கூட தங்கத்தில் போட மாட்டியா என்று கூறி, ஆபாசமாக திட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மா, கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் 2 வாலிபர்களும், தாலி சங்கிலியை பத்மா மீது எறிந்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story