கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

கடலூர்

சிதம்பரம்

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் வருகிற 25-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம், 30-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா 31-ந் தேதி நடைபெற உள்ளது. மேலும் 1-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 2-ந்தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, என்.கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்துள்ளனர்.


Next Story