ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
தர்மபுரி
அரூர்:
அரூர் அருகே உள்ள வெளாம்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 74). ஓய்வு பெற்ற போலீஸ்காரரான இவர் தனது மோட்டார் சைக்கிளை அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சதாசிவம் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story