தர்மபுரி அருகேவெல்டிங் தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
தர்மபுரி அருகே உள்ள கீழ் கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விஜயலட்சுமி வீட்டில் உள்ள ஒரு அறையில் 4 பவுன் நகையை கழற்றி வைத்துவிட்டு அருகே உள்ள குளியலறைக்கு சென்றார். பின்னர் குளித்துவிட்டு மீண்டும் அந்த அறைக்கு வந்தபோது அறையில் வைக்கப்பட்டிருந்த நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறையின் வெளியே சென்று பார்த்தார். அப்போது ஒரு மர்ம நபர் நகையை திருடி கொண்டு ஓடியது தெரியவந்தது.
ஜன்னல் வழியாக கையை விட்டு வீட்டின் அறையில் இருந்த நகையை அந்த மர்ம நபர் திருடி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.