அரூர் அருகேவீட்டின் பூட்டை உடைத்துவெள்ளி பொருட்கள் திருட்டு
அரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டப்பட்டன.
தர்மபுரி
அரூர்:
அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவர் ஓசூரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெள்ளிப் பொருட்களை வாங்கி மோப்பிரிப்பட்டியில் உள்ள வீட்டில் வைத்து இருந்தார். இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சக்திவேல் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story