ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு


ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

சேலம் கன்னங்குறிச்சி ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

சேலம்

கன்னங்குறிச்சி

சேலம் கன்னங்குறிச்சி ஆறுமுக அய்யர் தெருவை சேர்ந்தவர் நீலகிருஷ்ணன். குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீலன், மோனிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story