காரிமங்கலம் அருகே நாயை கொன்று ஆடுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

காரிமங்கலம் அருகே நாயை கொன்று ஆடுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கீழ் சவுளுபட்டியை சேர்ந்தவர் சத்யராஜ். விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே தோட்டத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். கால்நடைகளை பாதுகாக்க நாய் ஒன்றையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் வீட்டின் அருகே இருந்த தோட்டத்திற்குள் புகுந்தனர்.
அப்போது நாய் குறைத்ததால் மர்மநபர்கள் நாயை அடித்து கொன்று விட்டு பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை திருடி சென்றனர். பின்னர் மறுநாள் காலை நாய் செத்து கிடந்ததையும், ஆடுகள் திருட்டு போனதையும் அறிந்த சத்யராஜ் இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை கொன்று ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






