பூட்டிய வீட்டில் நகை திருட்டு


பூட்டிய வீட்டில் நகை திருட்டு
x

பூட்டிய வீட்டில் நகை திருட்டு போனது.

மதுரை

பேரையூர்,

பேரையூரை சேர்ந்த பால்பாண்டியன் மனைவி சுந்தரசெல்வி(வயது 30). சம்பவத்தன்று சுந்தரசெல்வி, தனது வீட்டில் இருந்து தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக சுந்தரசெல்விக்கு உறவினர் கொடுத்த தகவலின் பேரில், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன்நகை மற்றும் ரூ.7000 திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



Next Story