பாப்பாரப்பட்டி அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு


பாப்பாரப்பட்டி அருகே  சக்தி மாரியம்மன் கோவிலில்    நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சக்தி மாரியம்மன் கோவில்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பிளியனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சத்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் நடை திறக்கப்பட்டு சாமிக்கு பூஜை செய்யப்படுவது வழக்கம். கோவிலில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மண்டபத்தில் வைத்திருந்த உண்டியலை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கோவிலில் சமீபத்தில் துலாபாரம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்திய ரூ.30 ஆயிரம் மற்றும் 4 கிராம் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இந்த திருட்டு தொடர்பாக ஊர் தனக்காரர் நடராஜன் அளித்த புகாரின்பேரில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story