நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
நாமக்கல்
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி ெஜயம்மாள் (62). கணவன், மனைவி தங்கள் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை ராசிபுரத்தில் உள்ள உழவர் சந்தைக்கு விற்பனை செய்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமணன் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story