திருச்செங்கோட்டில் கடலைக்காய் மில்லில் ரூ.2 லட்சம் திருட்டு வடமாநில தொழிலாளிக்கு வலைவீச்சு
திருச்செங்கோட்டில் கடலைக்காய் மில்லில் ரூ.2 லட்சம் திருட்டு வடமாநில தொழிலாளிக்கு வலைவீச்சு
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் சாலை பகுதியில் முருகேசன் (வயது 49) என்பவர் கடலைக்காய் மில் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மில்லில் ரூ.2 லட்சத்தை மேஜை டிராயரில் வைத்து பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அதே மில்லில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்த சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த சியாமலால் கோட்டா (32) என்பவர் திருட்டு சம்பவம் நடந்த நாளில் இருந்து வேலைக்கு வராததது தெரியவந்தது. மேலும் அவருடைய செல்போன் எண் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து போலீசார் வடமாநில தொழிலாளி சியாமலால் கோட்டாவை வலைவீசி தேடி வருகின்றனர்.