பரமத்திவேலூர் அருகேநர்சு வீட்டில் 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பரமத்திவேலூர் அருகேநர்சு வீட்டில் 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே நர்சு வீட்டில் 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நர்சு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 55). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு பாலப்பட்டிக்கு வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் திருட்டு

பின்னர் உடனடியாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீட்டுக்குள் பார்த்தனர். அதில் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story