சோலார் மின்விளக்கு திருட்டு
சோலார் மின்விளக்கு திருட்டு போனது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா பாகனூர் ஊராட்சியில் கிடங்கூர், இளஞ்சியமங்கலம், பாகனூர், தோமையார்புரம் மெக்கவயல் போன்ற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நவாஸ்கனி எம்.பி. நிதியின் கீழ் கிடங்கூர் விலக்கு சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த சோலார் விளக்கை சேதப்படுத்தியதுடன் சோலார் பேனல், எல்.இ.டி.பல்பு போன்றவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாகனூர் ஊராட்சி தலைவர் பாப்பா ராமநாதன் எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story