கலெக்டர் அலுவலகத்தில் மடிக்கணினிகள் திருட்டு


கலெக்டர் அலுவலகத்தில் மடிக்கணினிகள் திருட்டு
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மடிக்கணினிகள் திருடிய உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பின்புறத்தில் இருக்கும் இணைப்பு கட்டிடத்தில் அறை எண் 27-ல் எல்காட் அலுவலக சேமிப்பு அறை உள்ளது. அதில் 15 மடிக்கணினிகள், 15 மானிட்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சேமிப்பு அறைக்கு ஆபரேட்டர் அனிதா சென்று உள்ளார். அப்போது ரூ.2.97 லட்சம் மதிப்பிலான 14 மடிக்கணினிகள் மற்றும் 15 மானிட்டர்கள் காணாமல் போய் இருந்துள்ளது.

இதுகுறித்து எல்காட் ஆதார் ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சமூக நல அலுவலக உதவியாளர் சுரேஷ் (வயது 34) மடிக்கணினிகள் மற்றும் மானிட்டர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து, மடிக்கணினிகள் மற்றும் மானிட்டர்களை பறிமுதல் செய்தனர்.


Next Story